“வாடகை கொடுக்கக் கூட காசில்ல” மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக ₹10 லட்சம் கடன்… உயிருடன் இருக்கும் போதே சுடுகாட்டைத் தஞ்சமாக்கிய தாயின் கண்ணீர் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாடகை கொடுக்கக் கூட காசில்ல” மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக ₹10 லட்சம் கடன்… உயிருடன் இருக்கும் போதே சுடுகாட்டைத் தஞ்சமாக்கிய தாயின் கண்ணீர் கதை..!!

Published

on

சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவதற்குப் பின்னால் இருக்கும் நியாயமான காரணத்தை உணர்த்தும் ஒரு நெஞ்சையுருக்கும் சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. சாகாமலேயே சுடுகாட்டைத் தங்களது தஞ்சமாக மாற்றிக் கொண்டு வாழும் ஒரு தாய் மற்றும் மகனின் அவல நிலை, பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது.

தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், சாந்துர்த்தி மண்டலத்தில் உள்ள கிஷ்டம்பேட்டைச் சேர்ந்தவர் அம்ருதா. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேமுலவாடா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகன் ராகேஷ் கடுமையான உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மகனைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் அம்ருதா செலவிட்டுள்ளார்.

Advertisement

மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக மட்டுமே சுமார் ₹10 லட்சம் வரை செலவு செய்ததால், அம்ருதா கடுமையான கடன் சுமையில் மூழ்கினார். ஒருகட்டத்தில் மருத்துவச் செலவுகளால் வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தத் தாயும் மகனும், வேறு வழியின்றி உயிருடன் வாழும் போதே தங்களது அடைக்கலத்திற்காக ஒரு சுடுகாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in