LATEST NEWS
“உயிரைக் கொடுத்துத் தோழியைக் காத்த வீராங்கனை” வறுமையில் வாடும் பெண்ணின் கல்விச் செலவை ஏற்ற ஆனந்த் மஹிந்திரா.. நெகிழ்ந்துபோய் நன்றி சொன்ன அமைச்சர் லோகேஷ்..!!
ராப்தாவு சம்பவத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலை வெளிப்படுத்திய பெண்ணின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாகப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்துள்ளார். ஆபத்தான சூழலிலும் தனது தோழியைக் காப்பாற்றப் போராடிய அந்தப் பெண்ணின் வீரத்தைப் பாராட்டி, அவருக்கு ஆதரவளிக்க அவர் முன்வந்துள்ளார்.
“அந்தப் பெண்ணின் குடும்பம் கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கிறது; அவர்களின் வீடும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது, தயவுசெய்து அவர்களுக்கு உதவுங்கள்” என்று நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் விடுத்த வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் விதமாக ஆனந்த் மஹிந்திரா இந்தத் துரித முடிவை எடுத்து உதவியுள்ளார்.
சொந்த உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும், துணிச்சலுடன் செயல்பட்டுத் தனது தோழியைப் பாதுகாக்க முயன்ற அந்தப் பெண்ணின் அசாத்திய தைரியத்தை ஆனந்த் மஹிந்திரா மற்றும் நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த இக்கட்டான தருணத்தில் பெண்ணின் கல்விக்கு உதவ முன்வந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவிற்கு ஆந்திர மாநில அமைச்சர் லோகேஷ் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
