“ஒரு நாள் முன்னதாகவே நள்ளிரவு கைது ஏன்..?” உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தவெக அரசு மதிக்கவில்லையா..? அதிமுக நிர்வாகி மன்னன் கைதால் கொதித்தெழுந்த இன்பதுரை எம்.பி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒரு நாள் முன்னதாகவே நள்ளிரவு கைது ஏன்..?” உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தவெக அரசு மதிக்கவில்லையா..? அதிமுக நிர்வாகி மன்னன் கைதால் கொதித்தெழுந்த இன்பதுரை எம்.பி..!!

Published

on

மதுரை முன்னாள் துணை மேயரும் அதிமுக நிர்வாகியுமான பி.எம். மன்னன், போலீசார் குறிப்பிட்ட நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே அவசரமாகக் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அதிமுக வழக்கறிஞரும் எம்பியுமான இன்பதுரை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது எதேச்சதிகாரத்தின் ஆட்சியா என்று தவெக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், பி.எம். மன்னனுக்கு BNSS பிரிவு 35(3)-ன் கீழ் வரும் நவம்பர் 7-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அவரும் குறிப்பிட்ட நாளில் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே நவம்பர் 6-ஆம் தேதி காலையிலேயே போலீசார் அவரை அவசர அவசரமாகக் கைது செய்தது எதற்காக என்றும், இது யாருடைய அழுத்தத்தின் பேரில் அரங்கேற்றப்பட்டது என்றும் இன்பதுரை கேட்டுள்ளார்.

Advertisement

மேலும், சதேந்தர் குமார் அண்டில் எதிர் சிபிஐ வழக்கில், 7 ஆண்டுகள் வரை தண்டனைக்குரிய குற்றங்களில் நோட்டீஸ் வழங்குவதே விதி என்றும், கைது செய்வது என்பது மிக அரிதான விதிவிலக்கு என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத் தீர்ப்பிற்கும், சட்டத்தின் நோக்கத்திற்கும் முரணாகச் செயல்பட்டுள்ள தவெக அரசைச் சட்டங்களும் நீதிமன்றத் தீர்ப்புகளும் கட்டுப்படுத்தாதா என்றும் அவர் தனது பதிவில் காட்டம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in