LATEST NEWS
“அரசு அதிகாரிகளின் உச்சகட்ட அலட்சியம்..” 30 வருஷத்துக்கு முன்னாடி கணவன்.. 5 நாளுக்கு முன்னாடி மகன் மரணம்.. 3 பேரக் குழந்தைகளுடன் நடுத்தெருவில் தவிக்கும் மூதாட்டி.. நெஞ்சைப் பிழியும் சோக சம்பவம்..!1
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தகுதியிருந்தும் அரசு வீட்டு வசதித் திட்டத்தின் பயன்கள் கிடைக்காததால், 30 ஆண்டுகளுக்கு முன்பு கணவனையும், 5 நாட்களுக்கு முன்பு ஒரே மகனையும் இழந்த ஆஷா தேவி என்ற முதியவர் தனது மூன்று பேரக் குழந்தைகளுடன் தவித்து வரும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இந்த எளிய குடும்பம், தங்குவதற்குச் சொந்தமாக வீடு இல்லாததால் கடந்த மூன்று மாதங்களாக வேறொருவரின் வீட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறது. வறுமையின் உச்சத்தில் இருக்கும் இந்த முதியவருக்கு அரசு தரப்பிலிருந்து கிடைக்க வேண்டிய பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் போன்ற எந்தவொரு நலத்திட்ட உதவியும் இதுவரை கிடைக்கவில்லை என்பது அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
30 ஆண்டுகளாகத் தனி மரமாகப் போராடி, தற்போது தன் மகனையும் இழந்து தவிக்கும் இந்த ஏழைத் தாய்க்கு வீடு வழங்காதது குறித்து, கிராமத் தலைவர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தகுதியான ஏழைகளைக் கண்டறிந்து உதவ வேண்டிய நிர்வாகம், இந்த முதியவரின் தொடர் அவல நிலையை முற்றிலும் புறக்கணித்துள்ளது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் விவாதமாக மாறியுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆஷா தேவியின் குடும்பத்திற்கு உடனடியாக வீடு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
