“அடச்சீ மனசாட்சியே இல்லையா..?” 4,000 பென்ஷன் பணத்துக்காக பாட்டியை நடுரோட்டில் வீசிய கொடூரன்.. இணையத்தை உலுக்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ மனசாட்சியே இல்லையா..?” 4,000 பென்ஷன் பணத்துக்காக பாட்டியை நடுரோட்டில் வீசிய கொடூரன்.. இணையத்தை உலுக்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

மஹாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரின் கார்கேடா பகுதியில், ஓய்வூதியப் பணத்துடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த முதிய பெண்மணி ஒருவரிடமிருந்து பணப்பையைப் பறிக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண்மணி வங்கியில் இருந்து தனது ஓய்வூதியத் தொகையான ரூ.4,000-ஐ எடுத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், அவரிடமிருந்த பையைப் பறிக்க முயன்றதுடன், அந்த முதிய பெண்மணியைக் கீழே தள்ளிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளான்.

இந்தக் கொடூரமான திருட்டு முயற்சி மற்றும் முதிய பெண்மணி கீழே தள்ளப்படும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in