“வேலையை விடுன்னு சொல்றாங்க… ஆனா எனக்கு” கையில் குழந்தைளுடன் வேலைக்கு செல்லும் அரசுப்பள்ளி ஆசிரியை…இவர்தான் உண்மையான சூப்பர் வுமன்.. பாராட்டும் நெட்டிசன்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வேலையை விடுன்னு சொல்றாங்க… ஆனா எனக்கு” கையில் குழந்தைளுடன் வேலைக்கு செல்லும் அரசுப்பள்ளி ஆசிரியை…இவர்தான் உண்மையான சூப்பர் வுமன்.. பாராட்டும் நெட்டிசன்கள்…!!

Published

on

அசாம் மாநிலத்தில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ருமி டேகா என்பவர், களத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ணியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு வழங்கிய அலுவல் பையைத் தோளில் சுமந்தபடி, தனது இரு கைக்குழந்தைகளையும் (இணை குழந்தைகள்) அழைத்துக்கொண்டு கிராமப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் பணி செய்யும் காட்சிகள் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

கடுமையான மழை மற்றும் வெள்ளச் சீற்றத்தால் அசாமின் கிராமப்புறப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும், ருமி டேகா தனது அரசுப் பணியைச் சற்றும் தொய்வின்றி மேற்கொண்டு வருகிறார். போதிய பராமரிப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், குழந்தைகள் இருவரையும் தன்னுடனேயே களப் பணிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இந்த சவாலான சூழலிலும் அவர் காட்டும் மன உறுதியும் கடமை உணர்வும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, தாய்மையின் வலிமையையும் ஒரு பெண் தொழிலாளியின் அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் அவருக்குப் பாராட்டு மழ பொழிந்து வருகின்றனர். அதேவேளையில், அரசுப் பணியில் இருக்கும் தாய்மார்களுக்குக் களப் பணிகளின்போது குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான அடிப்படை வசதிகள் அல்லது சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற விவாதத்தையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in