LATEST NEWS
“காதலிச்சா பயப்படக் கூடாது..!” கல்யாணத்துக்குப் பின்வாங்கிய காதலன்.. நேராக அவன் வீட்டிற்கே சென்று காதலி செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!
காதலிப்பவர்கள் பயப்பட மாட்டார்கள் என்ற கூற்றை அச்சு அசலாக மெய்ப்பிக்கும் வகையில், அஸ்ஸாம் மாநிலம் பார்பேட்டா பகுதியில் தன் காதலுக்காகப் போராடிய இளம் பெண் ஒருவரின் அசாத்திய துணிச்சல் தற்பொழுது சோசியல் மீடியாவில் மாபெரும் விவாதப் புயலையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு இளைஞரை உருகி உருகி காதலித்து வந்த அந்தப் பெண்ணிடம், திருமணப் பேச்சுவார்த்தை வந்தபோது அந்த இளைஞர் ஏதோ ஒரு காரணத்தால் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஏமாற்றத்தைக் கண்டு சோர்ந்து போகாமல், தன் ரியல் பாசத்தை நிலைநாட்ட அந்தப் பெண் எடுத்த அதிரடி முடிவு ஒட்டுமொத்தப் பகுதியையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யாரைக் கண்டும் அஞ்சாத அந்தப் பெண், சற்றும் தாமதிக்காமல் நேராகத் தனது காதலனின் வீட்டிற்கே சென்று அவரது தந்தையிடம் அசாத்திய நம்பிக்கையுடன் காரசாரமாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் இச்சம்பவத்தைக் காண அங்கே கிராம மக்கள் அசுர வேகத்தில் திரண்டதால், அந்த ஒட்டுமொத்த கிராமத்திலுமே இதுதான் தற்பொழுது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இன்றைய அவசர டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா உலகத்தில் காதலின் பெயரால் ஏமாற்றுகளும், டைம்பாஸ் கலாச்சாரங்களும் அசிங்கமான நரகச் சூழலை உருவாக்கி வரும் நிலையில், தன் காதலுக்காகத் துணிந்து நின்ற இந்தப் பெண்ணைப் பெற்ற அந்த இளைஞர் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர் என்றும், உண்மைக் காதல் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்றும் உலக நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைக் காட்டுத்தீயாகப் பகிர்ந்து வருகின்றனர்.
