CRIME
“அம்மா… என்னை மார்பில் குத்துறாங்க!” நள்ளிரவில் வந்த கடைசி போன் கால்… கதறிய கல்லூரி மாணவியின் கொடூர முடிவு.. திடுக்கிடும் பின்னணி..!!
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான நிமிஷா தாகுரியா என்ற மாணவி, தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதிகாலை 2 மணியளவில் நிமிஷா தனது தாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். “அம்மா… அவர்கள் என்னை அடித்துவிட்டார்கள், மார்பில் குத்தினார்கள்” என்று கதறிவிட்டு உடனடியாக அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் போலீசாரின் உதவியுடன் தேடியபோது, ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் நிமிஷா மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக நிமிஷாவுடன் தங்கியிருந்த அஷிக் அலி என்ற 26 வயது இளைஞரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், நிமிஷா அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக அந்த இளைஞர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவலைக் கூறி வருகிறார். எனினும், நிமிஷாவின் உடலில் காயங்களின் அடையாளங்கள் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியின் கடைசித் தொலைபேசி அழைப்பிற்கும், இளைஞரின் வாக்குமூலத்திற்கும் இடையே பெரும் வேறுபாடு இருப்பதால், இந்த வழக்கைத் தற்கொலை மற்றும் கொலை ஆகிய இரு கோணங்களிலும் உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
