“என் மாமியாருடன் தான் வாழ்வேன்.. மனைவிக்கு விருப்பம் இருந்தா இருக்கட்டும்..!” 20 வயது மருமகன் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. உறைந்து போன போலீஸ்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் மாமியாருடன் தான் வாழ்வேன்.. மனைவிக்கு விருப்பம் இருந்தா இருக்கட்டும்..!” 20 வயது மருமகன் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. உறைந்து போன போலீஸ்..!!

Published

on

சினிமா கதைகளையே மிஞ்சும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில், சொந்த மாமியாரையே 20 வயது மருமகன் காதலித்துத் திருமணம் செய்யப் போவதாகக் காவல் நிலையத்திலேயே துணிச்சலாகப் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து குழந்தைகளுடன் கணவரை இழந்து தவித்த 35 வயதான அந்தப் பெண்ணிற்கும், அவரது சொந்த மகளைத் திருமணம் செய்யவிருந்த 20 வயது மருமகனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த உறவு குறித்து அறிந்த குடும்பத்தினரும், பிள்ளைகளும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துத் தகராறில் ஈடுபடவே, இந்த விவகாரம் மெயின்புரியின் பிச்சுவா காவல் நிலையம் வரை விசாரணைக்குச் சென்றுள்ளது.

காவல்துறையினர் முன்னிலையில் நடந்த இந்த விசாரணையின் போது, அந்த 20 வயது இளைஞர் எவ்விதக் கூச்சமும் இன்றி, “இந்தப் பெண் என் மாமியார் தான். ஆனால் நான் இவரையே திருமணம் செய்துகொண்டு, இவரின் ஐந்து குழந்தைகளையும் நானே பார்த்துக் கொள்வேன், என் மனைவிக்கு விருப்பம் இருந்தால் எங்களுடன் இருக்கலாம்” என்று அதிரடியாகக் கூறியுள்ளார் அதேபோல் அந்த 35 வயது மாமியாரும் மருமகனுடன் தான் செல்வேன் என்பதில் பிடிவாதமாக நின்றுள்ளார். இந்த விசித்திரச் சம்பவம், கடந்த ஆண்டு அலிகாரில் மகளுக்குத் திருமணத் தேதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகனுடன் தாயே ஓடிப்போன மற்றொரு திகிலூட்டும் சம்பவத்தை நெட்டிசன்களுக்கு நினைவூட்டி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in