“போலீஸைக் கூப்பிடுடா”நடுரோட்டில் நட்டநடு ராத்திரியில் ரகளை.. டெலிவரி பாய்க்காக செக்யூரிட்டியை எட்டி உதைத்த இளம்பெண்.. ஒரு சாப்பாட்டுக்காக இப்படியா.? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“போலீஸைக் கூப்பிடுடா”நடுரோட்டில் நட்டநடு ராத்திரியில் ரகளை.. டெலிவரி பாய்க்காக செக்யூரிட்டியை எட்டி உதைத்த இளம்பெண்.. ஒரு சாப்பாட்டுக்காக இப்படியா.?

Published

on

கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘அம்ரபாலி செஞ்சுரியன் பார்க் டெரஸ் ஹோம்ஸ்’ குடியிருப்பு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்திருந்த நிலையில், உணவை எடுத்து வந்த டெலிவரி பாயை குடியிருப்பு நுழைவாயிலில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த அந்தப் பெண், சொசைட்டி கேட் பகுதிக்கு வந்து பாதுகாப்பு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோவில், பாதுகாப்பு ஊழியர்களை அந்தப் பெண் ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவரை எட்டி உதைக்க முயல்வதும், மற்றொரு ஊழியரை கையால் தாக்குவதும் காட்சிகளில் தெரிகிறது. “என்னைத் தொடாதே, காவல் துறையை அழை” என்று கூச்சலிட்டபடி, அங்கிருந்த ஊழியர்களை அறைந்து விடுவதாகவும் அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisement

இந்தச் சம்பவம் பிஸ்ரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. டெலிவரி பாயை பாதுகாப்பு ஊழியர்கள் ஏன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்பதற்கான தெளிவான காரணம் இன்னும் தெரியவரவில்லை. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செக்யூரிட்டிகளிடம் அந்தப் பெண் நடந்துகொண்ட விதம் இணையவாசிகளிடையே பலத்த கண்டனத்தைப் பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in