LATEST NEWS
இனி “கனிமொழி கருணாநிதி” இல்லை… தனது அடையாளத்தில் கனிமொழி எடுத்த அந்த அதிரடி முடிவு..!!
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய அதிகாரப்பூர்வ பெயரை மாற்றியுள்ளார். இதுவரை “கனிமொழி கருணாநிதி” என்று அழைக்கப்பட்டு வந்த அவர், இனி “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என்று தனது தாயாரின் பெயரையும் தன் பெயருக்கு அடுத்ததாக முறைப்படி சேர்த்துக்கொண்டுள்ளார்.
தந்தை பெயருக்கு இணையான முக்கியத்துவத்தை தாயின் பெயருக்கும் வழங்கி, தன் அடையாளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள கனிமொழியின் இந்த நெகிழ்ச்சியான முன்னெடுப்பு, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
