CRIME
“காதலித்து கரம்பிடித்த கணவனே செய்த வெறிச்செயல்.”. லாட்ஜில் 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவி-யில் சிக்கிய திகில் காட்சிகள்..!!
கர்நாடக மாநிலம் தொடபல்லாபுராவில் உள்ள ஒரு லாட்ஜில், 23 வயதான வித்யா என்ற இளம் பெண் அவரது கணவரான ஆனந்த் என்பவரால் அடையாள அட்டை கயிற்றைப் பயன்படுத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு இடையே கடந்த ஆறு மாதங்களாகக் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வித்யா தன் கணவரைப் பிரிந்து பெங்களூருவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்குச் சென்றுள்ளார். ஆனந்த் கொடுத்த ஆள்மாறாட்டப் புகாரின் பேரில், காவல்துறையினர் வித்யாவை அழைத்து இருவரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்களுக்கு முன்புதான் வித்யாவை ஆனந்துடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு ஆனந்த் வித்யாவைத் தொடபல்லாபுராவில் உள்ள எஸ்சிஎஸ் லாட்ஜிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நள்ளிரவு 1:00 மணியளவில் வித்யாவைக் கொலை செய்துவிட்டு, அவரது கைப்பேசியை எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டிவிட்டு ஆனந்த் மட்டும் தனியாகத் தப்பியோடியுள்ளார். அறை பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே ஆட்கள் இருப்பதாக நினைத்த லாட்ஜ் ஊழியர்கள், 24 மணி நேரத்திற்குப் பிறகும் ஆனந்தின் தொலைபேசி அணைக்கப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் அறையைத் திறந்து பார்த்தபோது வித்யா சடலமாகக் கிடந்ததைக் கண்டறிந்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடபல்லாபுர நகரக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆனந்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
