“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பல ஆண்களுடன்.. கணவன் செய்த கொடூர சித்ரவதை.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” மனைவிக்கு போதை மருந்து கொடுத்து பல ஆண்களுடன்.. கணவன் செய்த கொடூர சித்ரவதை.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

ஆஸ்திரியாவின் மார்ச்ட்ரெங்க் நகரில், 51 வயதான ராபர்ட் ஐச்சிங்கர் என்ற கணவன் பணத்தேவைக்காகத் தனது 39 வயது மனைவி டேனியலாவிற்குப் போதை மருந்து கொடுத்து, சுயநினைவின்றி இருந்த அவரைப் பல ஆண்களுடன் உடலுறவு கொள்ள அனுமதித்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வன்முறையான உடலுறவின் போது ஏற்பட்ட கடுமையான உள் மற்றும் வெளிக்காயங்கள் காரணமாக, ஒரு முக்கிய இரத்த நாளம் வெட்டப்பட்டு அதிகப்படியான இரத்தப்போக்கினால் டேனியலா பரிதாபமாக உயிரிழந்தார். தன் மனைவி இறந்த அதே இரவிலும் அண்டை வீட்டுக்காரருக்கு, “நான் அவளுக்கு நன்றாக மது அருந்தக் கொடுக்கிறேன், நீ அவளுடன் மீண்டும் உடலுறவு கொள்ளலாம்” என்று டேனியலாவை ‘செத்த பிணம்’ எனக் குறிப்பிட்டு ராபர்ட் அனுப்பிய அருவருக்கத்தக்க குறுஞ்செய்திகளை ஆதாரமாகக் கைப்பற்றிப் போலீசார் அவரை ஜூலை 2 அன்று அதிரடியாகக் கைது செய்தனர்.

இக்கொடூர மரணத்தைத் தொடர்ந்து ராபர்ட்டின் 48 வயது முன்னாள் மனைவியும் காவல்துறையிடம் திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தங்களுக்கு முதல் மகன் பிறந்த பிறகு ராபர்ட் வன்முறையாக நடந்துகொள்ளத் தொடங்கியதாகவும், மற்ற தம்பதியினருடன் பாலியல் நடவடிக்கைகளில்ஈடுபடுமாறு வற்புறுத்தியதை மறுத்ததால் தனது தாடை எலும்பை உடைத்துத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் மனைவிகளைப் பரிமாறிக்கொள்ளும் விசித்திரமான பழக்கம் குறித்து ராபர்ட் பேசியுள்ள நிலையில், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபரீதக் கொலை வழக்கை ஆஸ்திரிய நாட்டுப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in