“இப்படியும் ஒரு போராட்டமா..?” 2 வருஷமா நெட் இல்ல.. ஆத்திரத்தில் ஜியோ நிறுவனத்தையே அலறவிட்ட கிராம மக்களின் அதிரடி காரியம்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“இப்படியும் ஒரு போராட்டமா..?” 2 வருஷமா நெட் இல்ல.. ஆத்திரத்தில் ஜியோ நிறுவனத்தையே அலறவிட்ட கிராம மக்களின் அதிரடி காரியம்.. வைரல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தௌலி கிராமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக 5ஜிநெட்வொர்க் சேவை கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அங்கு ஆய்வுக்கு வந்த ஜியோ நிறுவன ஊழியரை மொபைல் டவரிலேயே கட்டிப்போட்டு சிறைபிடித்த விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்கள் பகுதியில் முறையான இணையச் சேவை இல்லாததால் மாணவர்களின் ஆன்லைன் படிப்புகள், அன்றாடத் தேவைகளுக்கான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பொறுமையிழந்த மக்கள் இந்த விபரீதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபுரத்தைப் பரிசோதிக்க வந்த தொழில்நுட்ப ஊழியரை மடக்கிப் பிடித்த கிராம மக்கள், அவரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்த நெட்வொர்க் டவரிலேயே கயிறுகளால் கட்டி வைத்தனர். இந்த அசம்பாவிதம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த ஊழியரை அதிரடியாக மீட்டனர். மேலும், இந்த அராஜகச் செயலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in