LATEST NEWS
“உட்காரும் இடத்தில் ஏதேனும் உறுத்துகிறதா..?” புதிய தலைமைச் செயலக அறிவிப்புக்கு சீமான் கொடுத்த மரண சவுக்கடி.. பரபரப்பில் அரசியல் களம்..!!
சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைச் செயலகக் கட்டிடத்தில் அப்படி என்ன குறைபாடு உள்ளது என்றும், அங்கு அமர்வதில் இவர்களுக்கு ஏதேனும் அசௌகரியமோ அல்லது உட்காரும் இடத்தில் ஏதேனும் உறுத்தலோ இருக்கிறதா என்றும் அவர் காட்டமாக வினவியுள்ளார். மக்கள் பணத்தைச் வீணடித்துப் புதிய வளாகம் அமைப்பதற்குப் பதிலாக, இருக்கும் இடத்தையே முறையாகப் பயன்படுத்தலாம் என்பதே அவரது பிரதான வாதமாக உள்ளது.
மேலும், தற்போதைய சட்டமன்ற நிகழ்வுகள் ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி போலவும், திரையரங்கம் போலவும் மாறிவிட்டதாகச் சாடியுள்ள சீமான், தமிழக சட்டமன்றத்தை சினிமா மன்றமாக மாற்றிவிட்டனர் என்று தவெகவினரைச் சாடியுள்ளார். காமராஜர், கக்கன், ஜீவானந்தம் போன்ற உன்னதமான, அறிவார்ந்த பெருந்தலைவர்கள் அமர்ந்து மக்கள் நலம் குறித்து விவாதித்த புனிதமான அந்த அவையில், தற்போதைய உறுப்பினர்கள் செய்யும் காரியங்கள் வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாகிகளின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தும் வகையில் இவர்களது செயல்பாடுகள் இருப்பதாகவும், இத்தகைய போக்கைக் கொண்டவர்களுக்கு எதற்குப் போராட்டமும் சுதந்திரமும் என்று தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்
