LATEST NEWS
BREAKING: பட்டிமன்ற ஜாம்பவான் சாலமன் பாப்பையா காலமானார்… தமிழ் நெஞ்சங்களை உலுக்கிய பேரிழப்பு..!!!
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (90) இன்று வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த இவர், கல்லூரிப் பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, பின்னர் தமிழ் இலக்கிய உலகிலும் பட்டிமன்ற மேடைகளிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தார். எளிமையான தமிழறிவு, நுட்பமான நகைச்சுவை மற்றும் நடுநிலையான பேச்சாற்றலால் பட்டிமன்றக் கலையை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.
தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட முகமாக மாறிய இவர், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பாராட்டு பெற்றார். இவரது கலை மற்றும் இலக்கியச் சேவையைப் பாராட்டி இந்திய அரசு 2021ஆம் ஆண்டு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் நெஞ்சங்கள் மற்றும் இலக்கிய உலகினரிடையே ஆழமான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
