LATEST NEWS
“NTR-க்கு நடந்த துரோகம் விஜய்க்கும் நடக்குமா..?” லண்டனுக்கு ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் கூட்டிட்டுப் போன ரகசியம் இதுதான்.. அப்பாவு போட்ட ஒரே போடு. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக முதலமைச்சர் விஜய் தனது கட்சிப் பிரமுகரான ஆதவ் அர்ஜுனாவை லண்டனுக்கு அழைத்துச் சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள தமிழகச் சபாநாயகர் அப்பாவு, ஆந்திராவின் பழைய அரசியல் வரலாற்று நிகழ்வொன்றை இதனுடன் ஒப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவில் முன்பு ஒருமுறை முதலமைச்சராக இருந்த என்.டி.ஆர் வெளிநாடு சென்றிருந்த சமயத்தில், அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு இங்கிருந்தபடியே ஆட்சியைக் கவிழ்த்து முதலமைச்சரானார் என்பதை அப்பாவு சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே ஆந்திர பாணியில், விஜய் இல்லாத நேரத்தில் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் ஆட்சியைக் கவிழ்த்து முதலமைச்சராகிவிடுவார் என்ற அச்சத்தில்தான் அவரைத் தனியே விட்டுச் செல்லாமல் பயந்து லண்டனுக்குக் கூடவே அழைத்துச் சென்றுள்ளீர்களா என்று அப்பாவு நேரடியாக முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், சபாநாயகர் அப்பாவுவின் இந்த சமூக ஊடகப் பதிவு தற்பொழுது மிகக் கடுமையான அரசியல் விவாதங்களை உசுப்பிவிட்டுள்ளது.
