“அட என்னப்பா கூத்து..! டைம் ட்ராவல் செய்த ரசமலாய்..” அமுல் நிறுவன தயாரிப்பில் நடந்த விசித்திரக் குளறுபடி.. இணையத்தில் வைரலாகும் பேக்கேஜிங் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அட என்னப்பா கூத்து..! டைம் ட்ராவல் செய்த ரசமலாய்..” அமுல் நிறுவன தயாரிப்பில் நடந்த விசித்திரக் குளறுபடி.. இணையத்தில் வைரலாகும் பேக்கேஜிங் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கிண்டல்..!!

Published

on

இன்று நபர் ஒருவர் அமுல் நிறுவனத்தின் ரசமலாயை வாங்கியபோது, அதன் பேக்கேஜிங்கில் இருந்த ஒரு விசித்திரமான அச்சுப் பிழையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தப் பொருளின் பாக்கெட்டை அவர் கூர்ந்து கவனித்தபோது, தயாரிப்புத் தேதி ஏப்ரல் 20, 2026 என்றும், அதன் காலாவதித் தேதி ஏப்ரல் 19, 2026 என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதாவது, அந்த உணவுப் பொருள் பேக் செய்யப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்பே காலாவதியாகிவிட்டதாக அதில் காட்டப்பட்டிருந்தது. உணவுப் பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதற்கு முன்பே எப்படி காலாவதியாகும் என்ற கேள்வி நுகர்வோர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு சாதாரண அச்சுப் பிழையாகவோ அல்லது லேபிளிங் தறாகவோ இருக்கலாம் என்றாலும், நுகர்வோரின் ஆரோக்கியத்தோடு தொடர்புடைய உணவுப் பொருட்களில் இதுபோன்ற தவறுகள் ஒருபோதும் நடக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் நிறுவனங்களின் பிராண்ட் மதிப்பை விட இதுபோன்ற தேதிகளை நம்பியே பொருட்களை வாங்குவதால், இதில் ஏற்படும் தவறுகள் மக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தாக முடியலாம். எனவே, அமுல் நிறுவனம் தனது தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். பொதுமக்கள் எந்தவொரு உணவுப் பொருளை வாங்கும்போதும் வெறும் பிராண்ட் பெயரை மட்டும் நம்பாமல், அதன் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை எப்போதும் சரிபார்த்து வாங்குவது அவசியமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in