LATEST NEWS
“31 வருஷ அதிமுகவை அழிக்க பிளானா..? விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்…! பரபரக்கும் தமிழ்நாடு அரசியல்..!!”
54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை முதலமைச்சர் விஜய் அழிக்க முயற்சிப்பது அரசியல் அநாகரிகம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய அளவில் வளர்ப்பதற்கு விஜய்க்கு முழு உரிமை உள்ளது; ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களையே வேட்பாளர்களாக அறிவிப்பது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை குதிரை பேரத்தின் மூலம் தவெக முடக்க நினைக்கிறது என்றும் சாடியுள்ளார். நீண்ட கால வரலாறு கொண்ட ஒரு இயக்கத்தை குறுக்கு வழியில் பலவீனப்படுத்த நினைக்கும் இத்தகைய செயல்பாடுகள் அரசியல் தர்மத்திற்கு எதிரானது என்றும், குதிரை பேர அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.
