LATEST NEWS
“பணமும் வரல… அறிவிப்பும் இல்ல…!” மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட்டதால் கொந்தளிக்கும் பெண்கள்… உங்களுக்கு என்ன நிலைமை..?!
செப்டம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை வழக்கமான தேதியை விட 4 நாள்களுக்கு முன்னதாகவே இன்று தமிழ்நாடு அரசு பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது. இருப்பினும், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பலருக்கும் இந்த உரிமைத் தொகை திடீரென நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதலே தங்களுக்கு உரிய உரிமைத் தொகை பணம் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது ஆதங்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், உங்களுக்கு இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை சரியாகக் கிடைத்திருக்கிறதா?
