“அம்மாடியோ.. 3 ஆயிரம் கொடுத்தா 10 ஆயிரம் ரூபாய்..!” வாடகை அறையில் கணினி, பிரிண்டருடன் அமர்ந்து இளைஞர்கள் செய்த ‘அந்த’ மாபெரும் மோசடி.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மாடியோ.. 3 ஆயிரம் கொடுத்தா 10 ஆயிரம் ரூபாய்..!” வாடகை அறையில் கணினி, பிரிண்டருடன் அமர்ந்து இளைஞர்கள் செய்த ‘அந்த’ மாபெரும் மோசடி.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கணினி மற்றும் பிரிண்டர் மூலம் கள்ள நோட்டுகளை அச்சிட்டு சந்தையில் புழக்கத்தில் விட்டு வந்த ஒரு கும்பலை அந்நகரக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்து, அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளது. சௌமில் குப்தா, ரோஷன் அலி மற்றும் ஷேர் சிங் ஆகிய மூவர் அடங்கிய இந்தக் கும்பல், வாடகை அறை ஒன்றை எடுத்து இந்த சட்டவிரோதத் தொழிலை நடத்தி வந்துள்ளது. 3 ஆயிரம் அசல் ரூபாய்க்குப் பதிலாக 10 ஆயிரம் கள்ள ரூபாய் என்ற கணக்கில் இவர்கள் சந்தையில் கள்ள நோட்டுகளை விநியோகம் செய்து வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இந்தக் கும்பல், தங்களின் பரவலான நெட்வொர்க் மூலம் ஏற்கனவே பல கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைச் சந்தையில் புழக்கத்தில் விட்டுள்ள அதிர்ச்சித் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தொடர் குற்றவாளிகள் என்றும், இவர்கள் மீது ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைப் பிடிக்கக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in