LATEST NEWS
வன்னி அரசு 10 நாளாவது அமைச்சராகணும்னு நினைச்சேன்… திமுக கூட்டணியிலிருந்து விலகியதற்கு காரணம்… உண்மையை உடைத்துப் பேசிய விசிக தலைவர்…!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தங்களின் கட்சி வெளியேறியதற்கான அரசியல் பின்னணி குறித்துப் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். தாம் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் ஒருபோதும் அமைச்சராகும் முடிவை எடுத்திருக்க மாட்டேன் என்றும், தம்மோடு பயணிக்கும் முக்கிய நிர்வாகியான வன்னி அரசு குறைந்தபட்சம் 10 நாட்களாவது அமைச்சராகப் பதவி வகிக்க வேண்டும் என்றே தாம் விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே 100% காரணம் என்று திருமாவளவன் திட்டவட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தொகுதிப் பங்கீடு மற்றும் புதிய கட்சிகளை உள்ளடக்குவதில் ஏற்பட்ட சிக்கல்களின் போது, தங்களைக் கூட்டணியில் தக்கவைத்துக் கொள்வதற்கான எவ்வித முயற்சியையும் திமுக தலைமை எடுக்கவில்லை என்றும், திமுகவே தங்களைக் கைவிட்டதே தவிர தாங்களாகக் கூட்டணியை விட்டு வெளியேறவில்லை என்றும் விசிக தலைவர் தனது அரசியல் நிலைப்பாட்டை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
