CM விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி.. திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவன்… இப்படி சொல்வாருன்னு எதிர்பார்க்கலையே… திக்குமுக்காடிப்போன தவெகவினர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

CM விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி.. திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவன்… இப்படி சொல்வாருன்னு எதிர்பார்க்கலையே… திக்குமுக்காடிப்போன தவெகவினர்..!!

Published

on

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதலமைச்சர் ஆற்றிய பதிலுரையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் ‘மிசா’ சிறைவாசம் குறித்து உடல்மொழி செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சரின் இந்தச் செயல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பாகத் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “இதுகுறித்து முதலமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், இதுபோன்ற உடல்மொழிகள் கண்ணியமான அணுகுமுறை அல்ல; மனித மாண்புகளுக்கு எதிரானது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மூத்த அரசியல் தலைவர்களைக் கையாளும் போது ஆளும் தரப்பு கூடுதல் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

அரசியல் களத்தில் மாற்றுக்கருத்துகள் இருப்பது இயல்பானது என்றாலும், “எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது” எனத் திருமாவளவன் தனது பதிவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நாகரிகத்தையும், தனிமனித ஒழுக்கத்தையும் எப்போதும் பேணிக் காக்க வேண்டும் என்றும் அவர் அனைத்துத் தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in