அதிர்ச்சி..! 7 வருஷம் காத்திருந்து மகனை பழிவாங்கிய தந்தை… தாலி காட்டும் நேரத்தில் மகனைக் கொடூரமாகக் கொன்று வீசிய பயங்கரம்…!! – cinefeeds
Connect with us

CRIME

அதிர்ச்சி..! 7 வருஷம் காத்திருந்து மகனை பழிவாங்கிய தந்தை… தாலி காட்டும் நேரத்தில் மகனைக் கொடூரமாகக் கொன்று வீசிய பயங்கரம்…!!

Published

on

டில்லியில் ஜிம் நடத்தி வந்த இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வீட்டில் மேளதாளம் மற்றும் மெஹந்தி சடங்குகளுடன் விழாக்கோலம் பூண்டிருந்தது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக, இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பேசாமல் இருந்துவந்துள்ளனர். திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு தந்தை, தான் பெரிய அளவில் ஏதோ ஒன்று செய்யப் போவதாகச் சுற்றியுள்ளவர்களிடம் கூறி வந்துள்ளார்.

திருமண ஊர்வலத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, தந்தை அழைப்பதாக நண்பர் கூறியதை நம்பி இளைஞர் வீட்டின் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒளிந்திருந்த தந்தையும் அவருடைய மூன்று நண்பர்களும் சேர்ந்து, கூர்மையான ஆயுதங்களால் இளைஞரைக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு உடலை ஒரு அறையில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். திருமணச் சடங்குகளுக்காக இளைஞரைத் தேடிய குடும்பத்தினர், அவரது சடலத்தைக் கண்டு அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்துபோயினர்.

Advertisement

கடந்த காலத்தில் சிலருக்கு முன்னிலையில் மகன் தன்னை அறைந்ததால் ஏற்பட்ட அவமானமும் ஆத்திரமுமே தந்தையின் இந்த கொடூரச் செயலுக்குக் காரணமாகும். கொலையைச் செய்த பின் ஜெய்ப்பூருக்குத் தப்பிச் சென்ற தந்தை, ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் கைபேசியை வாங்கி அண்டை வீட்டாரைத் தொடர்புகொண்டு மகன் இறந்துவிட்டானா என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உண்மையைத் தெரிந்துகொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக ஜெய்ப்பூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே, கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in