CRIME
“என் பொண்டாட்டி தற்கொலை பண்ணிக்கிட்டா..” கணவன் ஆடிய கண்ணீர் நாடகம்.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கேட்டவரம்பாளையம் கிராமத்தில், மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் காஞ்சனா (45) என்ற மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கட்டிடத் தொழிலாளியான கணவன் முருகனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 7 அன்று இரவு போதையில் வீட்டிற்கு வந்த முருகன், சாப்பாடு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் காஞ்சனாவிடம் சண்டையிட்டு அவரைப் படிக்கட்டில் தள்ளிவிட்டுள்ளார். பின்னர், காஞ்சனா மயங்கிய நிலையில் இருந்தபோது வீட்டில் இருந்த புடவையால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, கொலையை மறைப்பதற்காக சடலத்தைத் தூக்கில் மாட்டி தற்கொலை நாடகமாடியுள்ளார்.
ஆதமங்கலம்புதூர் போலீசார் காஞ்சனாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவரது உடலில் இருந்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் மூலம் அது தற்கொலை அல்ல, கொலை என்பது அம்பலமானது. போலீசாரின் அதிரடி விசாரணையில் சிக்கிய கணவன் முருகன், சாப்பாடு செய்யாமல் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
