CRIME
“மது போதையில் வாலிபர்கள் அராஜகம்…!” சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது பாய்ந்த கார்… அடுத்த மோடியே நேர்ந்த விபரிதம்.. பதறவைக்கும் பின்னணி..!!
ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 14-ல் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் மற்றும் ஆஷா மருத்துவமனைக்கு அருகே, மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டி வந்த இளைஞர்கள் இருவர் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்கள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். காரை அசாத்திய வேகத்தில் இயக்கி இளைஞர்கள் ஏற்படுத்திய இந்த அராஜக விபத்தில், சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் பலத்த காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்தப் பெண்ணை ரஞ்சனா ராய் (32) என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தைத் தொடர்ந்து, காரை ஓட்டி வந்த வாலிபர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு இளைஞரை பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் உடனடியாகக் காவலில் எடுத்துள்ளனர். இவர்கள் மீது மதுபோதையில் அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
