CRIME
“துரோகத்தின் உச்சகட்டம்..!” இஞ்சித் தோட்டம் சென்ற கணவன்.. போனில் தகவல் கொடுத்த மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து 8 வருடப் பாசத்தை அறுத்தெறிந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே தாலுகாவில் உள்ள பசவனஹட்டி கிராமத்தில், இஞ்சி பயிர் விற்பனைப் பணத்திற்காகவும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாலும் விவசாயி மோகன் (34) என்பவர் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனால் வாடகைக்கொலையாளிகள் மூலம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோகனுக்கும் ஜெயலட்சுமிக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குத்தகைக்கு நிலம் எடுத்து இஞ்சி விவசாயம் செய்து வந்த மோகனின் கள்ளக்காதல் எதிர்ப்பினாலும், இஞ்சி விற்பனை மூலம் வரவிருந்த பெருந்தொகையைக் கைப்பற்றவும் ஜெயலட்சுமி தனது கள்ளக்காதலன் தனஞ்செயமூர்த்தியுடன் சேர்ந்து கணவனைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காகத் தனஞ்செயமூர்த்தி, ஜெகதீஷ் மற்றும் புட்டராஜு ஆகிய வாடகைக்கொலையாளிகளுக்கு ரூ.1 லட்சம் தருவதாகப் பேசி, முதற்கட்டமாக ரூ.10,000 முன்பணமும் கொடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2 அன்று நடத்தப்பட்ட முதல் கொலை முயற்சி தோல்வியடைந்த நிலையில், செப்டம்பர் 4 அன்று இரவு மோகன் தனது இஞ்சி தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றபோது ஜெயலட்சுமி போன் மூலம் கள்ளக்காதலனுக்குத் தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த கொலையாளிகள், மோகனை இரும்புத் தடியால் தலையில் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். தொடக்கத்தில் தனக்கு எதுவுமே தெரியாது என ஜெயலட்சுமி நாடகமாடிய போதிலும், காண்டசி காவல்துறையினர் நடத்திய மொபைல் போன் அழைப்பு பதிவுகள் மற்றும் தீவிர விசாரணையில் இந்தத் துரோகம் அம்பலமானது. தற்போது ஜெயலட்சுமி, கள்ளக்காதலன் தனஞ்செயமூர்த்தி உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
