“அடிப்பாவி..கணவனை தீர்த்துக்கட்ட நிலத்தை விற்ற மனைவி…” கூலிப்படை ஏவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடிப்பாவி..கணவனை தீர்த்துக்கட்ட நிலத்தை விற்ற மனைவி…” கூலிப்படை ஏவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் ரத்தன்புரி காவல் எல்லைக்குட்பட்ட அம்பர்பூர் காட்டுப் பகுதியில், கடந்த செப்டம்பர் 27 அன்று பிரவீன் என்ற விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கினை 60 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் துப்புதுலக்கியுள்ளனர். பிரவீனின் மனைவி ரேகா, தனது கள்ளக்காதலன் விகாஸுடன் சேர்ந்து வாழ கணவனைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவரைக் கொல்வதற்காகத் தனது குடும்ப நிலத்தை விற்று, 10 லட்ச ரூபாய் தருவதாகக் கூறி வாடகைக்கொலைகாரர்களை இவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்காக விகாஸ் மூலமாக ராஜா மற்றும் கல்யாண் சிங் ஆகிய இரு கூலிப்படையினர் 3 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திட்டமிட்டபடி பிரவீனை காட்டுப் பகுதிக்கு வரவழைத்து இருவரும் தலா ஒரு முறை என இரு குண்டுகளைச் சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பியுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட மனைவி ரேகா, கள்ளக்காதலன் விகாஸ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ராஜா, கல்யாண் சிங் ஆகிய நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், கார் மற்றும் மொபைல் போன்களைப் பறிமுதல் செய்து சிறையிலடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in