“நிறைமாத கர்ப்பிணி அடித்துக் கொலை” வீட்டு வாசலில் 2 நாட்களாக கிடந்த சடலம்… 2 குழந்தைகளுடன் தப்பிய கணவன்.. பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நிறைமாத கர்ப்பிணி அடித்துக் கொலை” வீட்டு வாசலில் 2 நாட்களாக கிடந்த சடலம்… 2 குழந்தைகளுடன் தப்பிய கணவன்.. பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

தாவணகெரே தாலுகா பெத்தூரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான பசம்மா என்பவர், தனது இரண்டாவது கர்ப்பத்தின் போது கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிங்கராஜ் என்பவரை இவர் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்பத்தில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பசம்மா, நடப்பதற்குக்கூட சிரமப்பட்ட நிலையில் கணவர் அவரைத் தாக்கியதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் முதலில் தாவணகெரே மாவட்ட மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோமா நிலையில் சிகிச்சையிலிருந்த போதே பசம்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால், 8 நாட்கள் சுயநினைவின்றி இருந்த அவர், பிறந்த குழந்தையைக் கூட பார்க்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

பசம்மாவின் இறப்பிற்குப் பிறகு, அவரது சடலத்தைக் கொண்டு வந்த கணவர் நிங்கராஜ், அதைத் தாவணகெரே கிராமப்புற காவல் நிலையம் அருகிலுள்ள சாலையோரத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அத்துடன் தனது ஆறு நாள் குழந்தையையும், மூன்று வயது மகளையும் தூக்கிக்கொண்டு அவர் தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவத்தை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் விரைந்து வந்து, உடலை எடுத்து நிங்கராஜின் வீட்டின் வாசலில் வைத்து இரண்டு நாட்கள் அவர் வருகைக்காகக் காத்திருந்தனர்.

கணவர் திரும்பி வராததால், பசம்மாவின் குடும்பத்தினர் தாவணகெரே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து உடற்கூறாய்வு நடத்தப்பட்டு, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள கணவரைத் தேடி வரும் அதே வேளையில், தாய் இன்றித் தவிக்கும் அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நிலைமை குறித்த கவலையும் அதிகரித்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in