“உன் தங்கை கதையை முடிச்சுட்டோம்… பிணத்தை எடுத்துட்டு போ..!” நள்ளிரவில் போன் போட்டுச் சொன்ன புகுந்தவீடு… கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் தங்கை கதையை முடிச்சுட்டோம்… பிணத்தை எடுத்துட்டு போ..!” நள்ளிரவில் போன் போட்டுச் சொன்ன புகுந்தவீடு… கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் ஈஷ்வர்பூர் பகுதியில் வரதட்சணைக் கொடுமையால் 21 வயதான கர்ப்பிணிப் பெண் முன்னிபானு மெஹபூப் கான் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் வரதட்சணையாக இரண்டரை லட்சம் ரூபாய் பணம் வாங்கி வருமாறு கணவனும் அவரது குடும்பத்தினரும் முன்னிபானுவைத் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். சம்பவத்தன்று தகராறு முற்றிய நிலையில், வயிற்றில் உயிரைச் சுமந்து கொண்டிருந்த அப்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய புகுந்த வீட்டினர், கூர்மையான ஆயுதத்தால் குத்தியும் கழுத்தை நெரித்தும் படுகொலை செய்துள்ளனர்.

கொலை செய்த கையோடு, முன்னிபானுவின் சகோதரனுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட கொலையாளிகள், “உன் தங்கையின் கதையை முடித்துவிட்டோம், வந்து பிணத்தை எடுத்துக்கொண்டு போ” என்று எவ்வித அச்சமுமின்றி மிரட்டியுள்ளது அனைவரையும் உறைய வைத்துள்ளது. தகவலறிந்து வந்த ஈஷ்வர்பூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை அரக்கத்தனத்திற்கு இரையான கர்ப்பிணிப் பெண்ணிற்கும், பிறக்காத குழந்தைக்கும் நீதி கோரி அப்பகுதி மக்களும் பெண்ணின் குடும்பத்தினரும் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in