CRIME
அடக்கொடுமையே…! 5 வயது சிறுமியை தெருவில் தரதரவென இழுத்துச் சென்று.. பக்கத்துவீட்டுப்பெண் செய்த கொடூரத்தால் அலறிய தாய்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.!!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜோடா பாடக் பகுதியில் உள்ள தர்மபுராவில், 5 வயது சிறுமி ஒருவர் பக்கத்து வீட்டுப் பெண்ணால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின்படி, அந்தப் பெண் சிறுமியை மிகக் கொடூரமாகத் தாக்கி, தெருவில் இழுத்துச் சென்று தனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாயார், குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது, அவரையும் அந்தப் பெண் அநாகரிகமாகப் பேசி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த தாயார் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகத் திரண்டு வந்து, துணிச்சலுடன் செயல்பட்டு அந்தப் பெண்ணின் பிடியிலிருந்து சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். தாக்குதலை நடத்திய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரது இத்தகைய வன்முறைப் போக்கினால் அந்தப் பகுதி மக்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் சிறுமிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அவர் பெரும் மன அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்துள்ளனர். எதிர்காலத்தில் யாருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படாதவாறு, அந்தப் பெண்ணிற்கு எதிராகக் கடுமையான சட்டப்பூர்வ மற்றும் மருத்துவக் காவலில் சிகிச்சை அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
