LATEST NEWS
BREAKING: தமிழக பெண்களுக்கு மெகா கிஃப்ட்: 12,000+ பேருந்துகளில் இலவச பயணம்.. வெற்றி பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் சிஎம் விஜய்..!!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்களுக்குப் பயணச் சீட்டுகளை வழங்கி தவெக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘மகளிர் விடியல் பேருந்து பயண’ திட்டத்தின் விரிவான அங்கமாக, பெண்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் புதிய பரிணாமத்துடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய விரிவாக்கத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ் (LSS) போன்ற சொகுசுப் பேருந்துகளிலும், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளிலும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இனி எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகப் பயணிக்கலாம். மாநிலம் முழுவதிலும் உள்ள 12,692 அரசுப் பேருந்துகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், தினசரி சுமார் 84.32 லட்சம் பெண் பயணிகள் இதன் மூலம் நேரடியாகப் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
