அட என்ன சொல்லுறீங்க..! “முதல்வர் விஜய் வீட்டின் அருகிலேயே வரப்போகுது..!” கடல் காற்றோடு புதிய தலைமைச் செயலகமா…? பொதுப்பணித்துறை இறக்கிய ஸ்கெட்ச்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட என்ன சொல்லுறீங்க..! “முதல்வர் விஜய் வீட்டின் அருகிலேயே வரப்போகுது..!” கடல் காற்றோடு புதிய தலைமைச் செயலகமா…? பொதுப்பணித்துறை இறக்கிய ஸ்கெட்ச்…!!

Published

on

சென்னை தலைமைச் செயலகத்தில் நிலவும் கடும் இட நெருக்கடியைப் போக்க, தமிழக அரசு புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. முன்னதாக முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது பட்டினப்பாக்கத்தில் உள்ள சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய கட்டடத்தை எழுப்புவது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. கடலின் அழகிய தோற்றத்தோடு, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் இல்லத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த நிலப்பகுதியைப் பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் முதற்கட்டமாக ஆய்வு செய்து நிறைவு செய்துள்ளதால், இந்த இடமே புதிய தலைமைச் செயலகத்திற்குத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

கடந்த காலத்தில் மு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களிலும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க முயற்சிக்கப்பட்டு, சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தற்போது நவீனத் தொழில்நுட்பம் மற்றும் உரிய பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக ஆராய்ந்த பிறகே அடுத்தகட்டப் பணிகள் தொடங்கும் என்பதால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in