“அடப்பாவிங்களா..! ஃபெவிக்விக் இருந்தா போதும்… ஏடிஎம் கார்டை வச்சே அக்கவுண்டை காலி பண்ணிடுவாங்க… அதிர்ச்சி தரும் புதிய வகை கிரைம்..! தானேவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவிங்களா..! ஃபெவிக்விக் இருந்தா போதும்… ஏடிஎம் கார்டை வச்சே அக்கவுண்டை காலி பண்ணிடுவாங்க… அதிர்ச்சி தரும் புதிய வகை கிரைம்..! தானேவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!!

Published

on

தானே மாவட்டம், கல்யாணின் கோல்சேவாடி பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில், அட்டை செருகும் துளையில் ‘ஃபெவிக்விக்’ பசையைப் பூசி மக்களின் ஏடிஎம் அட்டைகளைச் சிக்க வைத்து, அவர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ராஜேஷ் குமார் யாதவ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அட்டை சிக்கிக்கொண்டு பயனர் தவிக்கும் போது, உதவுவது போல் வரும் கும்பலைச் சேர்ந்த நபர், ஏடிஎம் பின் எண்ணை மூன்று முறை உள்ளிடுமாறு கூறுவார். அதன்பின்னரும் பணம் வராத நிலையில், ஒரு குறிப்பிட்ட கைபேசி எண்ணை அழைத்துத் தொடர்புகொள்ளுமாறு கூறி, வங்கித் தகவல்கள் மற்றும் பின் எண்ணைப் பெற்று கணக்கிலிருந்து பணத்தை ஆட்டையையைப் போடுவது இவர்களின் வழக்கமாகும்.

பாதிக்கப்பட்ட குடிமகன் ஒருவர் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட கோல்சேவாடி போலீசார், முதற்கட்டமாக ராஜேஷ் குமார் யாதவைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் பிவண்டியின் கொங்காவ் பகுதியில் இருப்பதும், அவர்கள் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பீகாருக்குத் தப்பிச் செல்ல முயல்வதும் தெரியவந்தது. இதையடுத்த காவல்துறையினர், திரைப்பட பாணியில் பரபரப்பான துரத்தலுக்குப் பிறகு ரயிலில் வைத்து அந்த மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட இந்தக் கும்பல் இதே முறையைப் பயன்படுத்தி மேலும் பலரை ஏமாற்றியிருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடிக் கும்பலால் இதுவரை எத்தனை பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒட்டுமொத்தமாக எவ்வளவு தொகை திருடப்பட்டுள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in