“என் மனைவி டிரான்ஸ்பருக்கு ரூ.7 லட்சம் கொடுத்தேன்” ஆனால் பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாரு… திமுகவை சேர்ந்தவர் வெளியிட்ட பரபரப்பு ஆடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் மனைவி டிரான்ஸ்பருக்கு ரூ.7 லட்சம் கொடுத்தேன்” ஆனால் பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாரு… திமுகவை சேர்ந்தவர் வெளியிட்ட பரபரப்பு ஆடியோ…!!

Published

on

தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் பெற்றுத் தர ரூ.100 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், திமுகவைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், தனது ஆசிரியையான மனைவியின் பணி மாறுதலுக்காக , கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் பரிந்துரையோடு அன்பில் மகேஸிடம் ரூ.7 லட்சம் பணம் கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் பரிந்துரையைக் கூட மதிக்காமல், பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை செய்து தராத அன்பில் மகேஸை போலீசார் தற்போது கைது செய்திருப்பது முற்றிலும் சரியான மற்றும் வரவேற்கத்தக்க நடவடிக்கைதான் என்று அந்த ஆடியோவில் அவர் தனது கடுமையான ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in