CRIME
“அடக்கடவுளே.. இன்ஸ்டாகிராம் காதல்… ஆறு மாதப் பிரிவு…” காதலனைத் தேடி வந்த 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மகாலட்சுமி என்ற இளம்பெண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையைச் சேர்ந்த 19 வயது ராகுல் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது கடந்த ஒரு வருடமாக காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலை அறிந்த மகாலட்சுமியின் தந்தை, மகளைக் கண்டித்ததோடு ராகுலையும் மிரட்டி திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் பயந்துபோன ராகுல் கடந்த ஆறு மாதங்களாக மகாலட்சுமியுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். காதலனைத் தொடர்பு கொள்ள முடியாததால் மனவேதனையடைந்த மகாலட்சுமி, ராகுலை நேரில் சந்திப்பதற்காகக் குடுமியான்மலைக்குத் தேடிச் சென்றுள்ளார்.
குடுமியான்மலைக்குச் சென்ற மகாலட்சுமிக்கு ராகுலின் முகவரி தெரியாததால், அங்கிருந்த ஒரு அரிசிக் கடையில் ராகுலின் விபரத்தைக் கேட்டுள்ளார். அதற்கு அக்கடைக்காரர், ராகுல் வெளியூரில் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறிவிட்டுச் சாப்பிடச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட மகாலட்சுமி, அருகில் உள்ள சிவன் கோவில் வளாகத்திற்குச் சென்று, தான் பையில் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயைத் தன் உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், 90% தீக்காயங்களுடன் இருந்த அவரை மீட்டுப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
