“மேடம், நான் உயிருடன் தான் இருக்கேன்… ஆனா அரசு ஃபைல்ல என்னைக் கொன்னுட்டாங்க…!” அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆட்சியர் முன்னாடி கதறிய முதியவர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மேடம், நான் உயிருடன் தான் இருக்கேன்… ஆனா அரசு ஃபைல்ல என்னைக் கொன்னுட்டாங்க…!” அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆட்சியர் முன்னாடி கதறிய முதியவர்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில், அரசு ஆவணங்களில் ‘இறந்துவிட்டதாக’ அறிவிக்கப்பட்டதால் முதியவர் ஒருவர் தனது ஓய்வூதியத்தையும் ஆதாரையும் இழந்து தவித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தௌசாவின் நாகோரியான் மொஹல்லாவைச் சேர்ந்த இர்பான் கான் என்ற முதியவர், “மேடம், நான் உங்கள் கண் முன்னால் உயிருடன் தான் நிற்கிறேன், சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்… ஆனால் அரசு கோப்புகளில் என்னைக் கொன்றுவிட்டார்கள்” என்று தௌசா மாவட்ட ஆட்சியர் டாக்டர் சௌமியா ஜாவிடம் வேதனையுடன் முறையிட்டார். நகராட்சி அமைப்பின் அலட்சியத்தால் உயிருடன் இருக்கும் மனிதர் ஆவணங்களில் இறந்துவிட்டதாகக் காட்டப்பட்டதால், அவரது முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதோடு, அவரது அடையாள அட்டையான ஆதாரும் செயலிழந்துபோனது.

இர்பான் கான் தனது ஓய்வூதியத்தை மீண்டும் பெற நீண்ட காலமாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிந்துள்ளார். நகராட்சிப் பதிவேடுகளில் அவர் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதற்கு முன் அவர் அளித்த புகாரின் பேரில், நிர்வாகம் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இர்பான் கான் உயிருடன் இருப்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் அரசு கணினியிலோ அல்லது ஆவணங்களிலோ அவரது நிலையை ‘உயிருடன் இருக்கிறார்’ என மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertisement

பொறுமையிழந்த இர்பான் கான் மீண்டும் ஆட்சியர் சௌமியா ஜாவை நேரில் சந்தித்துத் தனது நிலைமையை எடுத்துரைத்தார். முதியவரின் கோரிக்கையைக் கேட்ட ஆட்சியர் சௌமியா ஜா, நகராட்சியின் இந்த மிகப்பெரிய அலட்சியத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்தார். உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்த ஆட்சியர், இர்பான் கானின் அரசுப் பதிவேடுகள் அனைத்தையும் உடனே சரிசெய்யவும், அவரது ஆதாரை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும், நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in