LATEST NEWS
அலட்சியத்தின் உச்சம்.. பச்சிளம் குழந்தைகள் வார்டில் தீப்பொறி… ஊழியர்கள் செய்த காரியத்தை பாருங்க.. புதிய சிசிடிவி காட்சி வெளியீடு..!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோ பதிவுகளின்படி, வென்டிலேட்டர் வெடிப்பதற்கு முன்பாக சிறிய அளவில் தீப்பொறிகள் ஏற்பட்டு எச்சரிக்கை அலாரங்கள் ஒலித்தபோதிலும், தீவிர சிகிச்சை பிரிவின் உள்ளே இருக்க வேண்டிய வார்டு உதவியாளர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் அங்கு பணியில் இல்லை. மாறாக, அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் வராண்டா மற்றும் லாபி பகுதிகளில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாக இக்காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
வென்டிலேட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்த பிறகே தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர், இருப்பினும் இந்த விபத்தில் மூன்று பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஊழியர்கள் விழிப்புடன் இருந்திருந்தால் இந்த பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அலட்சியமாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
