“அடேங்கப்பா.. ஒரே வருஷத்தில் 3 மடங்கு உயர்வு..!” திமுகவின் மெகா வசூல்… ரூ.365.78 கோடி கலெக்ஷன் பார்த்து மிரண்ட தேசிய கட்சிகள்.. வெளியானது ADR-ன் அதிரடி அறிக்கை..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேங்கப்பா.. ஒரே வருஷத்தில் 3 மடங்கு உயர்வு..!” திமுகவின் மெகா வசூல்… ரூ.365.78 கோடி கலெக்ஷன் பார்த்து மிரண்ட தேசிய கட்சிகள்.. வெளியானது ADR-ன் அதிரடி அறிக்கை..!!!

Published

on

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள 2024-25 நிதியாண்டிற்கான புதிய நிதி அறிக்கையில், இந்தியப் பிராந்தியக் கட்சிகளின் நிதி மற்றும் நன்கொடை முந்தைய ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரித்து 1,051.56 கோடி ரூபாயை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸைத் தவிர்த்து ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் போன்ற பிற தேசியக் கட்சிகளை விடப் பிராந்தியக் கட்சிகள் அதிக நிதியைத் திரட்டியுள்ளன. குறிப்பாகத் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் அதிமுக ஆகிய ஐந்து முதன்மைப் பிராந்தியக் கட்சிகள் மட்டுமே 840.12 கோடி ரூபாயைக் குவித்துள்ளன. பெரு நிறுவனங்கள், ‘ப்ரூடன் எலக்டோரல் டிரஸ்ட்’ போன்ற தேர்தல் அறக்கட்டளைகள் மற்றும் நேரடி கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தே இந்த நிதியின் பெரும்பகுதி 61.33% வந்துள்ளது.

இதில் குறிப்பாகத் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான திமுக 365.78 கோடி ரூபாய் நிதி திரட்டி முதலிடத்தில் உள்ள நிலையில், அதில் 300.64 கோடி ரூபாய் பெயர் அறிவிக்கப்படாத நன்கொடையாளர்களிடமிருந்தும், 20,000 ரூபாய்க்கும் குறைவான ரொக்க நன்கொடைகளாகவும் பெறப்பட்டதாகக் காட்டப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி 20,000 ரூபாய்க்கும் குறைவான ரொக்க நன்கொடைகளுக்கு முகவரி மற்றும் பான் கார்டு விவரங்கள் தேவையில்லை என்பதால், இத்தொகை 4,470% உயர்ந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதேபோன்று திரிணாமுல் காங்கிரஸிற்கு வந்த நிதியிலும் முகவரி மற்றும் பான் விவரங்கள் முழுமையாக இல்லை என்பதும், நாட்டில் உள்ள 67 அங்கீகரிக்கப்பட்ட பிராந்தியக் கட்சிகளில் 33 கட்சிகள் தங்களது நிதி அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in