CRIME
“என் உடம்பே தீப்பற்றி எரிவது போல இருந்தது..” மர்ம நபர் செய்த நடுங்கவைக்கும் கொடூரம்.. உணவுக்காகக் காத்திருந்த நபருக்கு நேர்ந்த விபரீதம்.. பகீர் சிசிடிவி காட்சி..!!
அமெரிக்காவின் ஈஸ்ட் ஹார்லமில் உணவகத்திற்கு வெளியே தனது உணவு ஆர்டருக்காகக் காத்திருந்த அல்காண்டரா என்ற நபர், அடையாளம் தெரியாத நபரால் கொடூரமான முறையில் அமிலத் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு அவர் உணவகத்தின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, கையில் ஒரு பாத்திரத்தை ஏந்தியபடி ஒரு மர்ம நபர் அவரை நோக்கிக் கடந்து சென்றுள்ளார். எவ்வித முன்னெச்சரிக்கையும் அல்லது காரணமும் இன்றி, அந்த நபர் அல்காண்டரா மீது தன்னிடம் இருந்த அடையாளம் தெரியாத திரவப் பொருளைத் திடீரென வீசி எறிந்துவிட்டுத் தப்பியோடினார்.
அந்த மர்மத் திரவம் உடலில் பட்ட அடுத்த கணமே தனது தோல் முற்றிலும் தீப்பற்றி எரிவது போன்ற கடுமையான எரிச்சலை உணர்ந்ததாக அல்காண்டரா தெரிவித்துள்ளார். இந்த கொடூரத் தாக்குதலால் அவரது முகத்தின் இடது பக்கம், காது மற்றும் கழுத்தின் பின்பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பின்னரே அவர் முழுமையாகப் புரிந்துகொண்டார். இந்தத் தாக்குதலில் அந்தத் திரவம் அவரது கண்களில் படாததால் அவர் அதிர்ஷ்டவசமாகப் பார்வையிழப்பில் இருந்து தப்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
