CRIME
“அய்யோ கடவுளே… மகிழ்ச்சியாகச் சென்ற சுற்றுலா…” 8 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. ஆசிரியர்கள் கண்முன்னே நடந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் ஆளந்தி பகுதியில் உள்ள ‘வின்னர்ஸ் அகாடமி’ என்ற தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், ராய்காட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திவோகர் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். இக்குழுவில் 25 மாணவர்கள், 17 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என மொத்தம் 48 பேர் இடம்பெற்றிருந்தனர். நேற்று மாலை கடற்கரையில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களில் சில மாணவர்கள் கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது கடல் அலையின் வேகம் மற்றும் நீரின் ஆழத்தை சரியாகக் கணிக்கத் தவறியதால், 8 மாணவர்கள் திடீரென கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.
மாணவர்கள் தண்ணீரில் மூழ்கியதைக் கண்டு கடற்கரையில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து, உள்ளூர் பொதுமக்கள், மீட்புக் குழுவினர் மற்றும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும், கடலில் மூழ்கிய 8 மாணவர்களையும் உடலற்ற நிலையிலேயே மீட்க முடிந்தது. மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ‘போர்லி’ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 16 வயதுடையவர்கள் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மகிழ்ச்சியாகச் சுற்றுலா சென்ற இடத்தில், ஒரே நேரத்தில் 8 பள்ளி மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
