CRIME
“எதற்கு பணம்..?” சொகுசு காரில் வந்த பெண்கள் செய்த பகீர் காரியம்.. ஆட்டோவை வழிமறித்த ஓட்டுநரின் அதிரடி ஆக்ரோஷம்.. வைரல் சம்பவம்..!!
டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் பகுதிக்குச் செல்வதற்காக மூன்று பெண்கள் 200 ரூபாய் கட்டணத்தில் ஒரு காரை முன்பதிவு செய்த நிலையில், அவர்கள் ஓட்டுநருக்குப் பணம் தராமல் ஏமாற்ற முயன்ற விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் அவர்கள் மூவரையும் காரில் ஏற்றி, பஹர்கஞ்ச் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே ஒரு பெண் முதலில் இறங்கியுள்ளார்; தனக்கான கட்டணத்தையும் சேர்த்து மீதமுள்ள இரு பெண்களும் செலுத்துவார்கள் என்று கூறிவிட்டு அவர் சென்றுள்ளார். ஆனால், அவர்கள் செல்ல வேண்டிய இறுதி இடத்தை அடைந்த பிறகு, காரில் இருந்த மற்ற இரண்டு பெண்களும் ஓட்டுநருக்குக் கட்டணப் பணத்தைச் செலுத்தாமல் தங்களது பைகளை எடுத்துக்கொண்டு இறங்கியுள்ளனர். ஓட்டுநர் கட்டணத்தைக் கேட்டபோது, தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு, “எதற்குப் பணம்?” என்று அலட்சியமாகக் கேட்டு ஓட்டுநரை ஏமாற்ற முற்பட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர், “நான் உங்களை இங்கு இலவசமாக அழைத்து வரவில்லை; கட்டணம் தருவதாக ஒப்புக்கொண்டுதானே காரில் ஏறினீர்கள், மரியாதையாகப் பணத்தைக் கொடுங்கள்” என்று சற்றே காரசாரமாக வாதிட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண்கள் ஓட்டுநரின் நியாயமான கேள்வியைப் பொருட்படுத்தாமல் அவரை அமைதியாக முறைத்துப் பார்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்காகப் பக்கத்தில் நின்ற ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளனர். பெண்களின் இந்த அப்பட்டமான ஏமாற்று வேலையால் கடுமையான கோபமடைந்த கார் ஓட்டுநர், உடனடியாக ஓடிச் சென்று அந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளார். பஹர்கஞ்ச் சாலையில் நடுரோட்டில் நடந்த இந்த ஓட்டுநர் மற்றும் பெண்களின் வாக்குவாத வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
