“அய்யோ காப்பாத்துங்க…!” கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பிஞ்சு குழந்தைகள்… நீரில் மூழ்கடித்து கொன்று நாடகமாடிய தாய்… கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ காப்பாத்துங்க…!” கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பிஞ்சு குழந்தைகள்… நீரில் மூழ்கடித்து கொன்று நாடகமாடிய தாய்… கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!

Published

on

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை கூராங்காடு பகுதியில் வசிப்பவர் ஜான் குமார் (வயது 36). தொழிலாளி. இவரது மனைவி நிவேத்யா (29). இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் (வயது 5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் இருந்தனர். ஜெனிபர் ஜூலியட் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்தநிலையில், குழந்தைகள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, குளியலறைத் தொட்டியில் மூழ்கிக் கிடப்பதாகக் கூறி நிவேத்யா சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொழிஞ்சாம்பாறை போலீசார் உடல்களைக் கைப்பற்றி பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நிவேத்யாவிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், நிவேத்யாவுக்கு வேறொருவருடன் கள்ளக்காதல் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இந்த சட்டவிரோத உறவுக்கு இடையூறாக இருந்ததால், குழந்தைகளைத் தீர்த்துக்கட்ட அவர் முடிவு செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

அதன்படி, கணவர் ஜான்குமார் வேலைக்குச் சென்ற பிறகு, வீட்டில் இருந்த 2 குழந்தைகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நிவேத்யா கொலை செய்துள்ளார். பின்னர், குழந்தைகள் தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, நிவேத்யாவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கள்ளக்காதலனுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in