அய்யோ கடவுளே… டிராக்டர் டிரெய்லரில் மோதி நசுங்கிய ஆம்புலன்ஸ் .. நொடியில் முடிந்த உயிர்… சடலத்தை கொண்டு சென்ற இடத்தில் செவிலியருக்கு நேர்ந்த கொடூர முடிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கடவுளே… டிராக்டர் டிரெய்லரில் மோதி நசுங்கிய ஆம்புலன்ஸ் .. நொடியில் முடிந்த உயிர்… சடலத்தை கொண்டு சென்ற இடத்தில் செவிலியருக்கு நேர்ந்த கொடூர முடிவு..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி அருகே உள்ள சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு சோகமான சாலை விபத்து ஏற்பட்டது. ஜக்தல்பூர் மகாராணி மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை சஞ்சீவனி ஆம்புலன்ஸ் மூலம் ராய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, இறந்தவரின் சடலத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆம்புலன்ஸ் புறப்பட்டபோது, சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற டிராக்டர் டிராலி மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கொடூர விபத்தில் ஆம்புலன்ஸில் பயணித்த பெண் செவிலியர் ஷப்னம் கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தின் வீரியத்தால் ஆம்புலன்ஸின் முன்பகுதி டிராக்டர் டிராலிக்குள்  சிக்கி முற்றிலும் நசுங்கியது. இதனால் செவிலியர் வாகனத்திற்குள்ளேயே மாட்டிக்கொண்டார். அவரை மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே மீட்டெடுக்க முடிந்தது, ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் மேலும் 3 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.

Advertisement

காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக தம்தரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் 108 வர்தான் பரமார்த் ஆம்புலன்ஸ் சேவை அமைப்பின் கிலாவன் சாஹு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். உயிரிழந்த செவிலியர் ஷப்னம் கானின் உடல் உடற்கூறாய்வுக்காக தம்தரி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in