“என்னை விடுடா.. ப்ளீஸ்..” பெண்ணை தாக்கி வன்கொடுமை செய்த கொடூரன்.. ‘புளு டைமண்ட்’ விடுதியில் நடந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை விடுடா.. ப்ளீஸ்..” பெண்ணை தாக்கி வன்கொடுமை செய்த கொடூரன்.. ‘புளு டைமண்ட்’ விடுதியில் நடந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் ஜீவிகா மகளிர் குழுவில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர், வலுக்கட்டாயமாக விடுதிக்குக் கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 27 அன்று கடன் தொகையை வசூலிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த அந்தப் பெண்ணை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த விக்ரம் குமார் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளார். பெகுசராய் டவுன் காவல் எல்லைக்குட்பட்ட “புளு டைமண்ட்” என்ற விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண், அங்கு ரோஹித் சர்மா என்ற மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ரோஹித் சர்மா அந்தப் பெண்ணை அறையில் பூட்டித் தாக்கியதுடன், பாலியல் வன்கொடுமையும் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அந்த வாலிபர் வீடியோவாக எடுத்துச் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்; அதில் அந்த இளம்பெண் “என்னை விடுடா.. ப்ளீஸ்” எனக் கதறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதற்கிடையில், அவரிடமிருந்து தப்பித்து விடுதியின் மற்றொரு அறைக்குச் சென்ற அந்தப் பெண், பெற்றோருக்கு ரகசியமாகத் தகவல் கொடுத்து அவர்களால் மீட்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி போலீஸாரின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் செப்டம்பர் 28 அன்று பெகுசராய் டவுன் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய குற்றவாளிகளான ரோஹித் சர்மா மற்றும் வினோத் குமார் ஆகியோரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுப் போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in