LATEST NEWS
“நம்பவே முடியல.. பிபிசி லைவ் வீடியோவில் புகுந்து உலகையே சிரிக்க வச்ச அந்த வாண்டுகளா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..”
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூத்த பத்திரிகையாளரான ராபர்ட் கெல்லி, தென் கொரியாவின் பூசானில் உள்ள தனது வீட்டு அலுவலகத்திலிருந்து பிபிசி தொலைக்காட்சி நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது குழந்தைகள் அறைக்குள் நுழைந்து குறும்புகள் செய்த வீடியோ உலகம் முழுவதும் படுவைரலானது. அவர் நேரலையில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், அவரது 4 வயது மகள் மேரியன் மஞ்சள் நிற ஸ்வெட்டர் அணிந்து நடனமாடியபடியே அறைக்குள் வர, அதைத் தொடர்ந்து அவரது தம்பி ஜேம்ஸும் வாக்கரில் அறைக்குள் நுழைந்தான். உடனடியாக கெல்லியின் மனைவி ஜுங்கா கிம் அறைக்குள் ஓடிவந்து இரு குழந்தைகளையும் அவசர அவசரமாக வெளியேற்றிய இந்த கள்ளம்கபடமற்ற காட்சி, இணையத்தில் பல கோடி பார்வைகளைப் பெற்று இன்றும் பலரின் முகத்தில் புன்னகையை வரவழைத்து வருகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இணையவாசிகளால் “பிபிசி அப்பா” என்று அன்போடு அழைக்கப்பட்ட ராபர்ட் கெல்லி, தற்போது 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தனது குடும்பத்தின் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து லைஃப் அப்டேட் கொடுத்துள்ளார். அன்று நேரலையில் அசிங்கப்பட்ட அந்த 4 வயது மகள் மேரியனுக்கு தற்போது 13 வயதும், குழந்தை ஜேம்ஸுக்கு தற்போது 10 வயதும் ஆகிறது. தன் மகனுடன் மலையேறும் புகைப்படங்கள் மற்றும் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ள நிலையில், “அவர்கள் அனைவரும் இவ்வளவு வளர்ந்துவிட்டார்கள் என்பதை நம்பவே முடியவில்லை” என நெட்டிசன்கள் வியப்புடன் இந்த வைரல் புகைப்படங்களுக்குக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
