CRIME
இது என்ன கொடுமை.. காதலை மறுத்த கல்லூரி மாணவி.. தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துவிட்டு ஓடிப் பாய்ந்து கட்டியணைத்த காமுகன்.. நடுக்கமூட்டும் சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் மைசூரு விஜயநகரில் உள்ள டிப்ளோமா கல்லூரி விடுதி அருகே, காதலை மறுத்த மாணவி மீது தீப்பிடித்த உடலோடு வளம் வந்து வாலிபர் ஒருவர் பாய்ந்து கட்டியணைத்து உயிரோடு கொளுத்த முயன்ற வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சந்தன் (27) என்ற வாலிபர், ஒரே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த 3 ஆண்டுகளாகக் காதலிப்பதாகக் கூறித் தொந்தரவு செய்து வந்துள்ளார். இது குறித்து ஏற்கனவே ஹலகூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பியிருந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாணவி கல்லூரிக்குச் சென்றபோது வழியில் மறித்த சந்தன், மீண்டும் காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி தீர்க்கமாக மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த சந்தன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலைத் தன் மீது ஊற்றித் தீவைத்துக்கொண்டதோடு, எதிர்பாராதவிதமாக அந்த மாணவியையும் இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக மாணவர்களும் பொதுமக்களும் உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்டுத் தீயை அணைத்து மாணவியின் உயிரைக் காப்பாற்றினர். இருப்பினும், இந்த கொடூர சம்பவத்தில் 50 சதவீத கடுமையான தீக்காயங்களுடன் சந்தன் கே.ஆர். அரசு மருத்துவமனையிலும், 20 சதவீத தீக்காயமடைந்த மாணவி ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மைசூரு விஜயநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்தத் துணிகரக் கொலை முயற்சி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
