CRIME
“என் மகளைக் கொடூரமா சித்திரவதை செஞ்சாங்க..” அடுத்தடுத்து மருத்துவ மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி அழும் தாய்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுத்தடுத்து மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஆந்திரா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று முதுகலை மருத்துவ மாணவிகள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று சின்வாவால்டூரு பகுதியில் உள்ள விடுதி அறையில், ஸ்ராவணி என்ற மருத்துவ மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளின் மரணத்திற்கு மருத்துவக் கல்லூரியில் கொடுக்கப்பட்ட கடுமையான மன உளைச்சலும் அராஜகமுமே காரணம் என்று ஸ்ராவணியின் தாய் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். “என் மகளை அவர்கள் மிகக் கொடூரமாகத் துன்புறுத்தினார்கள். அந்த சித்திரவதையைத் தாங்க முடியாமல்தான் அவள் இந்த விபரீத முடிவை எடுத்துக்கொண்டாள்” என்று அவர் கதறி அழுதுள்ளார். இந்தத் தொடர் தற்கொலைச் சம்பவங்கள் குறித்து விசாகப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கல்லூரியில் நிலவும் பணிச்சுமை மற்றும் சீனியர்களின் டார்ச்சர் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
