“ரூ.1 கோடி கொடுத்தா தான் உயிரோட விடுவோம்..!” ஆப்பிரிக்கக் காடுகளில் சிக்கிய இந்தியப் பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ரூ.1 கோடி கொடுத்தா தான் உயிரோட விடுவோம்..!” ஆப்பிரிக்கக் காடுகளில் சிக்கிய இந்தியப் பயணிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. பகீர் பின்னணி..!!

Published

on

அமெரிக்காவிற்குச் சட்டவிரோதப் பாதையில் செல்ல முயன்ற குஜராத்தைச் சேர்ந்த மூன்று பேர் எத்தியோப்பியாவில் மர்மமான முறையில் கடத்தப்பட்டுள்ளனர். மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா சாவ்தா (30), இவரது உறவினர்களான ரித்விக் ஜன்சாரி (23) மற்றும் மயூரி (27) ஆகிய மூவரும் ஏஜெண்டுகள் மூலமாகத் தலா ரூ.70 முதல் ரூ.75 லட்சம் வரை கொடுத்து கடந்த செப்டம்பர் 20 அன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூர், அபுதாபி வழியாக எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை அடைந்த இவர்களிடமிருந்து கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதிக்குப் பிறகு எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் மொபைல் எண்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, தங்களைக் கடத்தல்காரர்கள் என்று அடையாளப்படுத்திய மர்ம நபர்கள், பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள இவர்களை விடுவிக்க ரூ.1 கோடி பிணைத்தொகை கேட்டு அவர்களது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஏற்கனவே ஏஜெண்டுகளிடம் பெரும் பணத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், தங்களது பிள்ளைகளைப் பத்திரமாக மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குஜராத்தின் லங்னாஜ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டிராவல் ஏஜெண்டுகளின் பின்னணி மற்றும் கடத்தல் கும்பல் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in