விமான விபத்தில் அரங்கேறிய பேராபத்து.. கதறிய 173 பயணிகள் செய்த விசித்திரமான காரியம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விமான விபத்தில் அரங்கேறிய பேராபத்து.. கதறிய 173 பயணிகள் செய்த விசித்திரமான காரியம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று டென்வர் விமான நிலைய ஓடுதளத்தில் டேக்-ஆஃப்-க்காக அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் டயர் வெடித்து பிரேக்குகளில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவசரக்கால வெளியேற்ற ஸ்லைடுகள் திறக்கப்பட்டன. அதனூடியாக விமானத்தில் இருந்த 173 பயணிகளும் பத்திரமாக கீழே குதித்து உயிர்தப்பினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அனைவரும் எவ்வித உயிர்ச்சேதமுமின்றி மீட்கப்பட்டனர்.

இருப்பினும், இந்த விபத்து தொடர்பாக வெளியான வீடியோவில், விமானத்தில் தீப்பிடித்து உயிரே ஆபத்தில் இருக்கும் அந்த இக்கட்டான சூழலிலும், பல பயணிகள் தங்களது பெரிய பேக்குகள் மற்றும் உடமைகளை கைகளில் தூக்கிக்கொண்டு அவசர ஸ்லைடில் இறங்கி வருவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in